Header Ads



13 ஆம் திகதி கோட்டாபய, பதவி விலகாவிட்டால்..?



 13 ஆம் திகதி கோட்டாபய பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் முழு கடையடைப்பில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் இன்று -10- ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும், எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி வேலைநிறுத்தம் மற்றும் முழு கடையடைப்பில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்றைய தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவசரமாக இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதியினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.