இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் - புகைப்பட தொகுப்பு
இலங்கையின் ஆளும் அரசு எதிர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை 100வது நாளை எட்டியது. பதவியில் இருந்த நாட்டின் ஜனாதிபதியை பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பிறகும் அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போராட்ட களத்தில் உள்ள மக்கள் உள்ளனர்.
கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்கள், தமது மாளிகையை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னதாகவே கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறினார். கடந்த வியாழக்கிழமை அவர் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அவரது தவறான நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அதன் இரண்டரை கோடி மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், தங்களின் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியே சென்றதை 100ஆம் நாள் போராட்டத்தில் மக்கள் கொண்டாடினர். BBC
Post a Comment