கோட்டாபய என்ற சாபம் தொலைந்து, போகும்வரை பிரச்சினைகள் முடியாது - நளின் பண்டார Mp
கோட்டாபய ராஜபக்ச என்ற சாபத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியும் வரை, அந்த சாபம் தொலைந்து போகும் வரை நாட்டின் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும்.
இந்த சாபம் பற்றி கூறிய ஹரின் பெர்னாண்டோ தற்போது நினைவுக்கு வருகிறார். ஹரின் பெர்னாண்டோ அங்கு போய் இருந்தாலும் இந்த சாபத்திற்கு முடிவு ஏற்படாது.
உண்மையில் இது சாபம். முழு நாட்டு மக்களும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கின்றனர். மக்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். சூன் பாண் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர், தான் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வாகனத்துடன் தீயிட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் இந்த கோபமும் ஆத்திரமும் கடந்த மே 9 ஆம் திகதி இருந்ததை விட அடுத்த சில தினங்களில் கடுமையாக வெளிப்படுத்தப்படலாம். அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லை.
கோட்டாபய ராஜபக்சவினர் தமது அதிகாரத்தை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுகின்றனரே தவிர நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடுவதாக தெரியவில்லை.
அரசியின் விலை தற்போது 275 ரூபாய், 300 ரூபாயாக உள்ளதுடன் அந்த விலைக்கும் கொள்வனவு செய்ய அரிசி இல்லை. ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் 60 ரூபாவுக்கு பருப்பை வழங்குவதாக கூறிய கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கீழேயே தற்போது 700 ரூபாவாக விலை அதிகரித்துள்ளது. சீனியின் விலை 350 முதல் 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்காக அதிகரித்துள்ளன.சமையல் எரிவாயுவின் விலை 7 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது?. மக்கள் தற்போது மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் நளின் பண்டார கூறியுள்ளார்.
Post a Comment