IMF பிரதிநிதிகள் இலங்கை வருகை - ஒருவாரம் தங்கியிருந்து நிலைமைகளை ஆராய்வர்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று (20) நாட்டிற்கு வரவுள்ளது.
அதன்படி, அவர்கள் ஒருவாரம் நாட்டில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கடந்த 7ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கைக்கு அமைவாக பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கலந்துரையாடல்களை நடாத்துவதுடன் அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment