வைத்தியம் பார்க்க வேண்டிய Dr வரிசையில் நின்றதால், குழந்தையை பிரசவித்த தாய்கு குருதிப்பெருக்கு
வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர் தாய் ஒருவருக்கு குருதிப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த சமயம் மருத்துவர் எரிபொருளை பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் நின்றிருந்தார்.
அவரை அழைத்து வர முச்சக்கரவண்டி கூட கிடைக்கவில்லை. எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றனர். ஆனால் அதற்கு கூட முடியாமல் போயுள்ளதாகவும் இவ்வாறான பரிதாபத்திற்கு யார் பொறுப்பு என மருத்துவர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பின்தங்கிய கிராமமொன்றில் அன்றி நுகேகொடவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. TN
Post a Comment