ஓரிடத்தில் சமைத்து உணவு பகிரும், community kitchen திட்டம் ஆரம்பம்
Singularity Sri Lanka மற்றும் சர்வோதய அமைப்பு என்பன இணைந்து இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
பொது சமையலறை (community kitchen) எனும் இத்திட்டம் விரைவில் கொழும்பு நகரமெங்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுகளை சமைத்து இலவசமாக வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.வளர்ந்த நாடுகளில் செயற்படும் பொது சமையலறைத் திட்டத்தை பின்பற்றி தற்போது இத்திட்டம் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மருதானை, பஞ்சிகாவத்தை அபேசிங்காராம விகாரையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதன் மூலம் செவ்வாய் இரவு உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் யாசகர்கள் என்போருக்கு இதன்போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கி உணவுப் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வல்பொல ராஹுல மன்றத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் மற்றும் சர்வோதய மன்றத்தின் பிரமுகர்கள், Singularity Sri Lanka அமைப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் பரீத் அஷ்ரப் அலீ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment