Header Ads



நள்ளிரவு வேளையில் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு அருகில் பதற்றமான நிலை


கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) நள்ளிரவு ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக சுமார் ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டதை தொடர்ந்து இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரண்டாம் கட்ட போராட்டம் இன்று (20) ஆரம்பிக்கவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.