Header Ads



அதானி குழுமத்திற்கு வழங்குமாறு மோடி, ஜனாதிபதியிடம் வலியுறுத்தினாரா..?


இலங்கை மின்சார சபையின் தலைவர், காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பில்  தெரிவித்த கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சற்று முன்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவிலேயே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக கோப் குழு விசாரணையின் போது, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ இந்தத் திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவதாக ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபைத் தலைவர், நேற்று (10) கோப் குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.