போராட்டக்காரர்களின் கைகளில் குருதி படிந்துள்ளது, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்கரர்கள் கொலையாளிகள் - மஹிந்த
போராட்ட அமைப்பை அமைதியான போராட்டக்காரர்கள் என கருத முடியாது அவர்களின் கைகளிலும் குருதிபடிந்துள்ளது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பில் இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையின் போதே மகிந்த ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலையில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதத்தலைவர்களால் கூட மே 9 ம் திகதி வன்முறையை தடுக்க முடியவில்லை.
கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள போராட்டத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
படுபொய்காரன் மற்றொரு அவதூரை, பொய்யை மிகவும் இலகுவாக பரப்ப எத்தனிக்கின்றான். இந்த நாட்டு பொதுமக்கள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய விடயம். தோல்வியடைந்தும் அவமானப்பட்டும் ஒரு துரும்பும் பொதுமக்களின் வேண்டுகோளை மதிக்காது இப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றம் சாட முற்படுகின்றான். ஆனால் இந்த நாட்டு மக்கள் அவ்வளவு மடையர்களல்ல என்பதை உரிய நேரத்தில் அவர்களின் உண்மைத் தோற்றத்தை காட்டுவார்கள்.
ReplyDelete