தோல்வியடைந்த ரணில், கோட்டாபயவிடம் அடிபணிந்தார்
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவிருந்தது. நந்தலால் வீரசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் தீர்மானித்திருந்த நிலையில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு தினேஷ் வீரக்கொடியின் பெயரை அவர் பரிந்துரை செய்திருந்தார்.
எனினும், அந்த யோசனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காத நிலையில், நிதியமைச்சராக நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க பிரதமர் இன்று வரை பரிந்துரைக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குள் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. நந்தலால் வீரசிங்கவை பதவியில் இருந்து நீக்கினால், பிரதமர் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார, எழுத்து மூலம் பிரதமருக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு பரிந்துரைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான அதிகார மோதலில் ரணில் விக்ரமசிங்க தோல்வி கண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment