ஒரு வருடத்திற்கு சம்பளம் இல்லை - பிரதமர்
ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை ஒரு வருட காலத்திற்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறுவதைத் தவிர்ப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவதை அமைச்சரவை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சரவைப் பத்திரத்தில் கோரப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பிரதமர் தீர்மானித்துள்ளார். tw
ஒருவருடத்துக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என்பது நல்லது ஆனால் அதிலும் ஒரு கட்டை வைத்து பொதுமக்களின் கண்களை மறைக்க முயல்பவன் தான் இந்த பிரதமர். எனவே, அந்த நிபந்தனையுடன் அடுத்த முக்கிய நிபந்தனையையும் சேர்க்க வேண்டும் சம்பளம் எழுபத்தைந்தாயிரம் ரூபா ஆனால் கிம்பளமும் ஏனைய கொடுப்பனவுகளும் பன்னிரண்டு இலட்சத்தைவிட அதிகம். எனவே சம்பளத்துடன் எந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது என்ற சர்த்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? ஒருபோதும் நடைபெறாது. இது போல்தான் இந்த நரியன் இருபத்தியொராவது சட்டத்திருத்தம் என்ற பெயரில் ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாக்கும் திட்டத்தை நிறைவேற்றுவான். எனவே இந்த நரிகளை விரட்டியடிக்கும் திட்டங்கள் உடனடியாக அமல்நடாத்தப்பட வேண்டும்.
ReplyDelete