Header Ads



"நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரதன தேரரே பொறுப்பு"


சேதனப் பசளை சம்பந்தப்பட்ட பயிர் செய்கை தொடர்பாக ஆலோசனை வழங்கிய அத்துரலியே ரதன தேரர் மற்றும் மருத்துவர் பாதெனிய போன்ற நபர்களே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அகில இலங்கை வேலை வாய்ப்பின்றி இருப்போரின் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துரலியே ரதன தேரர் மற்றும் பாதெனிய போன்றவர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது ஒளிந்துக்காண்டுள்ளனர் எனவும் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கமத்தொழில் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களின் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கான தீர்வு யோசனையை முன்வைப்பதற்காக அகில இலங்கை தொழில் வாய்ப்பின்றி இருப்போரின் சங்கத்தினர் நேற்று கமத்தொழில் அமைச்சுக்கு சென்று அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் சுமித் பிரியசாந்த,

இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தொழில் வாய்ப்புகளை பெற முடியாதவர்கள் கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையால், கமத்தொழிலையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பசளைகள் இல்லை, விலை அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, உழவு இயந்திரங்கள் இல்லை. இவ்வாறான நிலைமையில் தொழில் வாய்ப்பின்றி இருப்போரில் பலர் கமத்தொழில் போன்ற தொழிலிலும் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டு ஆட்சியாளர்களின் சிறப்பான நிர்வாகம் காரணமாக இருக்கும் தொழிலை காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலைமை. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பெரும் தொகையானோர் கமத்தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏற்பட போகும் பாதிப்பை தவிர்ப்பதற்காக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுப்படுத்தியதாகவும் சுமித் பிரியசாந்த தெரிவித்துள்ளார். TW

No comments

Powered by Blogger.