Header Ads



அரபு நாடுகளிடம் உதவி கோரினார் ஜனாதிபதி - கொழும்பில் உள்ள தூதுவர்களை அவசரமாக சந்தித்தார்



A.A. Mohamed Anzir

இலங்கை மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ கொழும்பில் உள்ள அரபு நாட்டுத் தூதுவர்களை இன்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி அவசர அவசரமாக சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நிகழ்ந்துள்ள இச்சந்திப்பில், அரபு நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றுள்ளனர். 

இலங்கையின் தற்போதை நிலவரம், அனால் எழுந்துள்ள நெருக்கடிகள், முஸ்லிம் நாடுகளுடனான உறவுகள் என பல விடயங்களையும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ, அவசரமாக இலங்கைக்கு உதவும்படி இதன்போது கோரியுள்ளார்.

நிதி உதவிகள் மாத்திரமின்றி எரிபொருள் உதவி, எரிவாயு உதவி, மருத்துவ உதவிகள் என்பவற்றின் மூலமாகவும் இலங்கைக்கு உதவ முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்போது பதில் வழங்கியுள்ள அரபு நாட்டுத் தூதுவர்கள், இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் தாம் தமது நாடுகளுக்கு உடனடியாக அறியப்படுத்துவதாகவும், இலங்கைக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தாமும் துணை நிற்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறித்த சந்திப்பில் பங்கேற்ற கொழும்பில் உள்ள அரபு நாட்டுத் தூதுவர் ஒருவர் மூலமாக, இத்தகவல் கிடைக்கப் பெற்றது.

No comments

Powered by Blogger.