தேர்தலுக்கு செல்வதே தற்போதைய, நெருக்கடிக்கு தீர்வுகாண ஒரே வழிமுறை
கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறுவதைப்போன்று ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மூலம் தேர்தலுக்கு தேவையான நிதியை பெற முடியுமா என ஆராய்நதால், நாட்டில் உள்ள பணத்தில் தேர்தலை நடத்த முடியும் என அரச நிதி தொடர்பான Public Finance இணையத்தளம் தெரிவிக்கிறது.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக 5.7 பில்லியன் ரூபா செலிவிடப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை விட மேலதிகமான நிதியை அரசாங்கம் முக்கியத்துவமற்ற செயற்றிட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயற்றிட்டங்களுக்காக 19.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தலைமையகத்தை அமைப்பதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியூடாக தேர்தலை நடத்த முடியும் என Public Finance இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் அந்த உம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உடனடியான தீர்வு ஹர்ஷா டீ சில்வா கூறுவது போல உடனடியாக தேர்தலுக்குச் செல்லுமாறு பாராளுமன்றத்தில் பிரேரணையை முன்வைக்க தயாராக வேண்டும். அது மாத்திரம்தான் தற்போது பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே வழி.
ReplyDelete