கத்தாரில் உள்ள இலங்கை, பெண்களின் மனிதாபிமான நற்பணி
விளையாட்டுத்துறையில் பெண்கள் - கத்தார் அமைப்பின் உறுப்பினர்கள், இலங்கையின் மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகை நிதி திரட்டியது.
சேகரிக்கப்பட்ட நிதியானது நேற்று 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி WISQ இன் தலைவரால் அமைப்பின் குழு உறுப்பினர்களுடன் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் பெண்கள் - கத்தார் அமைப்பு என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது கத்தாரில் வசிக்கும் இலங்கைப் பெண்களின் மறைக்கப்பட்ட விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்துவதற்காக மூன்று பிள்ளைகளின் தாயான நுசைலா பதுர்தீனால் ஆரம்பிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குள் WISQ ஆனது ஒரு பெரிய அளவிலான உறுப்பினர்களை ஈர்க்க முடிந்தது. மேலும் இப்போது எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பெண்களுக்காக பிரத்யேகமாக நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
முஸாதிக் முஜீப்
Post a Comment