இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் மகளின் கதை, முஸ்லிம்களின் எதிர்ப்பினால் பிரிட்டனில் திரைப்படம் ரத்து
பிரிட்டனில் திரையரங்குகளுக்கு முன் ஆர்ப்பட்டம் வெடித்ததை அடுத்து முஹமது நபியின் மகள் பற்றிய திரைப்படம் ஒன்றை திரையிடுவதை சினிவேல்ட் நிறுவனம் ரத்துச் செய்துள்ளது.
தமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சினிவேல்ட் சினிமா வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டன் திரையரங்குகளில் இருந்து “தி லேடி ஹெவன்” என்ற திரைப்படத்தை நீக்கும்படி கோரிய மனு ஒன்றில் 120,000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படம் மதநிந்தனை மற்றும் மதப்பிளவை ஏற்படுத்துவதாக போல்டன் பள்ளிவாசல்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment