ரஷ்ய விமானத்தை தடுத்தது ரணிலா..? ராஜபக்சக்களை வதை செய்து மக்கள் மனங்களில் வெறுப்பூட்டுகிறாரா..??
ரஷ்யா தேவையில்லை… உங்களோடு தான் நிற்கிறோம் என்று அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் செய்தியொன்றைச் சொன்னாரா ரணில்?
இலங்கைக்கான தூதுவரை அழைத்து கண்டித்த ரஷ்யா காட்டமாக கூறியும் , விமானம் இன்னமும் கொழும்பில் தான் இருக்கிறது..
ஆனாலும் ,ரணில் அமைதியாகவே இருக்கிறார்..
உண்மையை பேசுகிறேன் என்று எப்போது பார்த்தாலும் வேலைவாய்ப்பின்மை , பஞ்சம் , பட்டினியை பற்றியே பேசி , ராஜபக்ச ஆட்சியினால் தான் இந்த நிலைமை வந்தது என்று மக்கள் மனங்களில் அதை அடிக்கடி பதியவைத்து பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளில் உள்ள ட்விஸ்ட்களை விட ரணம் ரணமான கோணங்களை கையாளுகிறார் ரணில் பெருமானார்..
இனி 21 ஆவது திருத்தம் வெற்றியடைந்தாலும் , தோல்வியடைந்தாலும் வெற்றி ரணிலுக்குத்தான்..
அதை நிறைவேற்ற முடியாமல் போனால் , அதற்கு காரணம் ராஜபக்சக்கள் தான் என்று கூறி ரணில் வெளியேறினால் ராஜபக்சக்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்...
மறுபுறம் ,அதை நிறைவேற்றிவிட்டால் ரணிலை கையில் பிடிக்க முடியாது.. அதற்காகத்தான் இராஜாங்க அமைச்சுக்களை வழங்குவதை ஒத்திவைத்திருக்கிறார் ரணில்... பதவி வேண்டிய எவரும் இதனை ஆதரித்தாக வேண்டும்...
ரணில் நாட்டுக்கு நல்லது செய்கிறாரோ இல்லையோ , ராஜபக்சக்களை தினமும் வைத்து செய்துகொண்டிருக்கிறார்..
என்ன நடக்குதென்றே புரியாமல் கமலஹாசனின் கவிதையை ட்விட்டரில் வாசித்தவர்களாக நாட்டு மக்கள் வரிசைகளில் நின்று கொண்டிருக்கின்றனர்.
வரப்போகும் பஞ்சம் தீரும்வரை, ராஜபக்சக்களின் பெயரை நாட்டில் நிலைக்க வைத்திருப்பார் ரணில்..
இரட்டை ஊதுகுழல்களை தொலைக்காட்சியில் கண்டாலே ஜெமினி பிலிம்ஸ் நினைவுக்கு வருவதுபோல , இனி வரும் காலங்களில் ரணிலைக் கண்டாலே ராஜபக்சக்களின் அரச நிர்வாகம் மக்கள் மனதில் நினைவுக்கு வந்து தொலைக்கும்..
ஓம் ராஜபக்சபிஷேக நமஹ…!
Siva Ramasamy
Post a Comment