கட்டார் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
என்னைப் பற்றி வெளியான செய்திகள் போலியானவை என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் நான் அங்கத்துவம் பெற்றுள்ளதாக போலி செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை முற்றிலும் பொய்யானவை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், தன்னைப் போன்ற பெயரில் வேறு சிலரும் இருக்கலாம், ஆனால் அது கண்டிப்பாக நான் இல்லை என்றும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
Post a Comment