உஸ்தாத்மார்களுக்கு ரஷ்யாவிடமிருந்து எச்சரிக்கை, ஆபத்தை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்து கொள்ளவில்லை என சஜித் எச்சரிக்கை
நாட்டின் உச்ச அதிகாரம் மக்கள் கையில் உள்ளதாகவும், மக்கள் ஆணையிலான ஒரு அரசாங்கமே பாராளுமன்றத்திலும் மக்கள் ஆணையிலான ஒரு ஜனாதிபதியுமே அதிகாரத்தில் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஆனால் அன்று வழங்கப்பட்ட மக்கள் ஆணை இன்று இல்லை எனவும், இன்று அரசியல் திரிபு நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், ராஜபக்ஸர்களை போன்றே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையும் இல்லாதொழிக்க வேண்டும் என்றே மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் போது ராஜபக்ஸக்களை இணைத்துவாறு எவ்வாறு ஆடசியமைக்க முடியும் என கேள்வி எழுப்பிய
எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் அபிப்பிராயத்திற்கு ஏற்பவே தான் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு பொய் கூறி சிலர் பெற்ற பதவிகளின் பலனை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,ஐந்து,ஆறு பில்லியன் டொலர்கள் கைவசம் இருப்பதாகவே நாட்டுக்கு அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர் எனவும் கூறினார்.
*முக்கிய வழக்குகளின் சாட்சியாளர்களும் கொல்லப்படுகின்றனர்!*
ஒருபுறம் நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதோடு, நாடு முழுவதும் கொலைக் கலாசாரம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தெம்பிலி(செவ்விள நீர்)வியாபாரி ஒருவர் கூட கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சில பாரதூரமான வழக்குகளின் சாட்சிகளும் இவ்வாறு கொல்லப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேசிய பாதுகாப்பு இன்று எங்கே என கேட்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
*இராஜதந்திர உஸ்தாத்மார்களுக்கு ரஷ்யாவிடமிருந்து எச்சரிக்கை*!
வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ரஷ்ய விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது சர்வதேச ரீதியாக பிரச்சினையொன்று எழுந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியிருந்த ஒரு விடயம் தற்போது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச உறவுகள் தொடர்பான உஸ்தாத்மார்கள் விடயங்களை கையாளும் போது பிரச்சினைகள் உக்கிரம் அடையும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கூட இழக்கவும், நாட்டின் சில தேயிலை உற்ப்பத்திகளை விற்பனை செய்ய முடியாத வகையிலுமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆபத்தை ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது வெளிவிவகார அமைச்சரோ புரிந்து கொள்ளாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், அவ்வாறு புரிந்து கொள்ளும் இயலுமை கூட இல்லாத ஒரு குழுவால் இந்நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.
*அவர்களும் இவர்களும் ஒன்றுதான் என்றாலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு அது பொருந்தாது!*
அவர்களும் ஒன்றுதான் இவர்களும் ஒன்றுதான் இரு தரப்பிற்கும் வேறுபாடுகள் இல்லை என சிலர் கூறுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களும் இவர்களும் ஒன்றுதான் என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றில் வேறு எந்த எதிர்க்கட்சியும் இதுவரை மேற்கொண்டிராத மகத்தான மக்கள் சேவைகளும், சமூக நலப்பணிகளும் ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு,பிரபஞ்சம் மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்து வசதிகள் போன்ற பல சமூகப் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி அமைப்பாளர் ஆனந்த அபேவிக்ரம அவர்களின் கட்சி அலுவலகம் இன்று (04) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment