Header Ads



கோட்டபாயவும், ரணிலும் வேண்டாம் - பள்ளிவாசலின் முன் போராட்டம் (வீடியோ)


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான  அரசும் வேண்டாம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்ஹவின் பிரதமர் நிருவாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக தாங்கள் கோரிக்கை விடுப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டக்களப்பில் தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜே.வி.பி. யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஜே.வி.பியின் பிரச்சாரகர்களும் அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையிலான அணியினர்  புதன்கிழமை மாலை 01.06.2022 ஏறாவூர் நகர கடைத் தெருக்களில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தெருக்களில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர் “வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களே” என விளிக்கும் இரு கையேடுகளை மக்களுக்கு விநியோகித்தனர்.




No comments

Powered by Blogger.