இங்கிலாந்து ராணிக்கு சட்ட ஆலோசனை கூற, தேர்ந்தெடுக்க பட்ட ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்
- Ahamed Alikhan -
சுல்தானா தபதார்,, இங்கிலாந்து ராணிக்கு சட்ட ஆலோசனை கூறுவதற்க்காக தேர்ந்தெடுக்க பட்ட ஹிஜாப் அணிந்த இரண்டாவது இஸ்லாமிய பெண்.
2016-ல் ஷஹீத் பாத்திமா என்ற பெயர் உடைய இஸ்லாமிய பெண்ணும் இந்த பதவிற்கு உயர்ந்து இருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள மொத்த சட்ட வல்லுநர்களில் வெறும் 2000 பேர் மட்டுமே இந்த பதவிக்கு வருகிறார்கள்... அதாவது மொத்த சட்ட வல்லுநர்களில் வெறும் 2% சதவிகிதம் மட்டுமே.
வெள்ளையர்கள் அல்லாத நிற சிறுபான்மை இனத்தவர்களில் 34 பேர் மட்டுமே இந்த பதவிற்கு வந்து உள்ளனர்...
அவர்களில் தபாதாரும் ஒருவர்.. பங்களாதேஷ் பெற்றோருக்கு பிறந்த பெண்.
சர்வேதச சட்டம், மனித உரிமை, கிரிமினல் வழக்குகளில் சிறந்து விளங்குகிறார்.
தபாதார் கூறுகிறார்..
"இந்த பயணம் மிக நீளமானது. சவால்கள் நிறைந்தது.
மிக கஷ்டமான திறமையான வழக்குகளில் 15 வருடம் வாதாடிய அனுபவம் இருக்க வேண்டும்.
எனக்கு எனது இனத்தையும், மதத்தையும்,பால் இனத்தையும் வைத்து நிறைய தடைகள் வந்தது..
அது போல எனது வாடிக்கையாளர்கள் எல்லாம் இது போன்ற துஷ்பிரயோகங்களால் பாதிக்க பட்டவர்கள் தான்..
நான் கோர்ட்க்கு ஹிஜாப் அணிந்து செல்லும் போது இந்த ஹிஜாப் அணிந்த பெண் ஏன் இங்கு வருகிறார் என என்னை எல்லோரும் சந்தேகம் கொண்டு பார்ப்பார்கள்.
சிலர் நீங்கள் பிரதிவாதியா என்பார்கள்..
சிலர் நீங்கள் மொழி பெயர்ப்பாளாரா..? என்பார்கள்..
ஆனால் நான் அவர்களின் மன நிலை, ஹிஜாப் பற்றிய பார்வைகளை எல்லாம் சட்டை செய்யாமல் நான் யார் என அவர்களுக்கு நிரூபித்து காட்டினேன்..
பதவி ஏற்பு விழாவில் சிலர் "விக்"அணிந்து வந்தனர்..
ஆனால் நான் ஹிஜாப் அணிந்து சென்றேன்.
அவர்களுக்கு நான் யார் என உணர்த்தினேன்..
ஹிஜாப் அணிந்த ஒரு பெண் பிரிட்டனில் இந்த நிலைக்கு உயரும் போது ஹிஜாப் அணிந்த பெண்கள் பிரான்சில் ஒடுக்க படுவதை கண்டு மனம் வெதும்புகின்றேன்.
அவர்களுக்கான என் போராட்டத்தை நான் ஆரம்பம் செய்ய உள்ளேன்.. இது சார்பாக ஐ. நா. வில் மனு கொடுத்து உள்ளேன்..
எனது சட்ட போராட்டம் தொடரும் என்கிறார்..
Post a Comment