முஸ்லிம் கட்சிகளாலும், முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் சமூகத்துக்கு பயன் இல்லை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கி நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தன. இந்த சர்வாதிகார அதிகாரம் காரணமாகவே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர் என சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
அத்தோடு, ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சைத் தவிர வேறு எந்தவொரு அமைச்சுப் பதவியும் வகிக்கக் கூடாது. அமைச்சுக-ளுக்கான செயலாளர்கள், பொது சேவையைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படவேண்டும். இராணுவ நியமனங்கள் வழங்கப்படக்கூடாது. ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு முன்பு ஆலோசனைச் சபையின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பன உட்பட 10 திருத்தங்களை 21 ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பரிந்துரை செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள கட்சிக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பைஸர் முஸ்தபா இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் “மாகாணங்களுக்கான ஆளுநர் நியமனம், வெளிநாட்டு தூதுவர்கள் நியமனம் என்பனவற்றில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதுடன் அமைச்சரவையையும் கலந்தாலோசிக்க வேண்டும். 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 19 ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடங்கப்பட்டவைகளே 21 ஆவது திருத்தசட்டத்தில் அமைவது பொருத்தமானது. இது சிறுபான்மை சமூகத்துக்கும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானதாகும்.
21 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்தாகும். 21 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்காத மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். ஜனாதிபதி வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாகும். என்றாலும் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பதவி விலகினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள கட்சியான பொதுஜன பெரமுன கட்சியிலிருந்தே ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட கட்சிக்கு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உதவியதனாலேயே 20 ஆவது திருத்தம் அவர்களின் ஆரதவுடன் அமுலுக்கு வந்தது. ரிசாத் பதியுதீன், ஹக்கீமின் கட்சிகளே இதற்கு காரணமாக அமைந்தன. அல்லாஹு அக்பர் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கி நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தன. இந்த சர்வாதிகார அதிகாரம் காரணமாகவே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு முடியுமாக இருந்த போதும் ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தார். 20க்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் கூட அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியாமற் போனது.
முஸ்லிம்கள் என்ற பெயர் பலகையுடன் கூடிய கட்சிகளாலேயே நாட்டின் இன வாதம் தூண்டப்படுகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகளாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் சமூகத்துக்கு பயன் இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த ஒரு முஸ்லிம் அமைச்சரின் கீழ் 50 நிறுவனங்கள் இருந்தன. என்றாலும் அவரால் சமூகத்துக்கு பயனுள்ள எந்த செயற்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாமற்போனது. அரசியல்வாதிகளால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது. இன்று மக்களின் ஏகாதிபத்திய அதிகாரமே ஓங்கி இருக்கின்றது. அதனால்தான் 5 வருட காலத்துக்குப் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்பினால் பதவி விலக வேண்டியேற்பட்டது. – Vidivelli
கடந்த பல மாதங்களாக (பொந்துகளில்) மறைந்திருந்த பைசர் முஸ்தபா போன்ற முஸ்லிம் ஏமாற்று அரசியல் பாம்புகள், மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் அரசியல் அனுதாபத்தை மீனவெடுக்க தகுந்த நேரத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளனர். முதலாவதாக, அரசாங்கம் (கோட்டா மற்றும் ரணில்), சி.ஐ.டி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பைசர் முஸ்தபா போன்றவர்களின் அனைத்து சொத்துக்களையும், அரசியல் வியாபாரம், கிக்பேக் மூலம் வியக்கவைக்கும் இதர முஸ்லிம் அரசியல் தலைவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். , கமிஷன்கள், மோசடிகள், கல்பிட்டி மற்றும் பாசிக்குடாவில் சுற்றுலாத் திட்டங்களை அமைத்து "சட்டத்தின் ஆட்சிக்கு" முன் கொண்டு வருவதற்கு பொய்யான ஆவணங்கள் மூலம் கிரீடம் நிலத்தை வாரிசு செய்தல். முஸ்லீம் வாக்காளர்கள் "அப்பாவிகள்" மற்றும் அடக்கமானவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக இந்த முனாபிக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடும் பெரிய முஸ்லீம் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களால் அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த காலங்கள் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன, ஆனால் "அரசியல் பங்காளித்தனம்" ஊடகங்கள் அனைத்தையும் முழுமையாக மூடிமறைப்பதையும் இந்த முனாக்கிகளின் சாக்குப்போக்குகளை மட்டுமே வெளியிடுவதையும் தடுக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் இந்த உண்மைகள் "விளம்பரப்படுத்தப்பட" வேண்டிய நேரம் இது, இதனால் முஸ்லிம்கள் "புதிய, இளம் மற்றும் நேர்மையான முஸ்லிம் அரசியல் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
ReplyDeleteNoor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice".