எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு, முன்றரை ஆண்டுகள் கடூழிய சிறை
சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் பொலிஸ் முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 30 வயது நபருக்கு முன்றரை ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதித்து, மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு - மாத்தறை வீதியை மறித்து எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோதே மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைதண்டனைக்கு மேலதிகமாக 6000 ரூபாய் அபராதமும், முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியமைக்கு 50,000 ரூபாய் நட்டஈடும் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment