மஹிந்த தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதாம்..!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் இன்று பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் முன்னாள் பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் வினவியபோது, குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்தார்.
அத்துடன், முன்னாள் பிரதமர் நலமுடன் இருப்பதாகவும், தனது அன்றாடப் பணிகளை எந்தவித இடையூறும் இன்றி அவர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment