Header Ads



பள்ளிவாசல்­க­ளி­லுள்ள ஸியா­ரங்களை பூட்டி வைக்­கக்கூடாது அது அடிப்­படை உரிமை மீற­லாகும் - அமைச்சர் விதுர


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

“பள்ளிவாசல்­க­ளி­லுள்ள ஸியா­ரங்கள் மூடி வைக்­கப்­ப­டவோ, பூட்டி வைக்­கப்­ப­டவோ கூடாது. அவ்­வாறு ஸியா­ரங்கள் மூடி வைக்­கப்­ப­டு­வதும், பூட்டி வைக்­கப்­ப­டு­வதும் தனி நபர்­களின் அடிப்­படை உரிமை மீற­லாகும். ஸியா­ரங்கள் பொது மக்­க­ளுக்­காக திறந்து வைக்­கப்­ப­ட­வேண்டும். இது தொடர்பில் கவனம் செலுத்­துவேன் என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க தெரி­வித்தார்.

புத்த சாசன சமய மற்றும் கலா­சார அமைச்­ச­ராக நிய­மனம் பெற்­றுள்ள விதுர விக்­ர­ம­நா­யக்­கவை கெள­ர­விக்கும் நிகழ்வு 

கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வா­சலில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்­வினை தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்­நி­கழ்வில் அமைச்சர் பொன்­னாடை போர்த்­தப்­பட்டு நினைவுச் சின்னம் வழங்­கப்­பட்டு கெள­ர­விக்­கப்­பட்டார்.

இந்­நி­கழ்­வி­னை­ய­டுத்து தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டி­னார்கள். கலந்­து­ரை­யா­டலின் போது பள்­ளி­வா­சல்­க­ளி­லுள்ள சூபிக்­களின் ஸியா­ரங்கள் அடிப்­ப­டை­வாத பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களால் மூடி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், பூட்­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் தலைவர் ரியாஸ் சாலி அமைச்­சிடம் முறை­யிட்டார். கொள்­ளுப்­பிட்டி பள்­ளி­வா­சலில் இவ்­வாறு 2 ஸியா­ரங்கள் பூட்டி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், மக்­களால் குறித்த சி­யா­ரங்­களை நெருங்க முடி­யா­துள்­ள­தா­கவும் அமைச்­ச­ரிடம் சுட்­டிக்­காட்­டினார். இவ்­வாறு நாட்டின் சில பகு­தி­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­களின் ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார். அத்­தோடு சில சக்திகளால் சூபி பள்­ளி­வா­சல்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

இதனால் முஸ்­லிம்கள் மத்­தியில் முரண்­பா­டுகள் உரு­வாகி வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்தே அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க ஸியா­ரங்கள் மூடப்­ப­டு­வதும் பூட்­டி­வைக்­கப்­ப­டு­வதும் மக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தாகும். இது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் கூறினார். அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் வக்புசபை மற்றும் திணைக்களத்துக்கு எதிராக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்

அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க பள்ளிவாசலின் அதிதிகள் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.- 

Vidivelli

No comments

Powered by Blogger.