மக்களை அச்சப்படுத்தி கொள்ளையடிக்க திட்டம், இங்கேயே உண்மையான பயங்கரவாதம் உள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை காட்டி மக்களை அச்சத்திற்குள் கொண்டு சென்று புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் போன்ற விடயங்களுக்காக சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு கொள்ளையடிப்பதற்கு வழி வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதுவே உண்மையான அரச பயங்கரவாதம் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (9)நடைபெற்ற மின்சார சட்டத் திருத்தங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்திக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. சுற்றாடலை பாதுகாப்பதற்காக சூரிய மற்றும் நீர் சக்திகள் மூலமான திட்டங்கள் அவசியமாகும். உண்மையில் இந்தத் திட்டங்களை இப்போது செய்வது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை காட்டி திருடர்களுக்கு திருடுவதற்காக பாதையை அமைப்பதற்காகவே முயற்சிக்கின்றனர்.
இந்த வேலைத்திட்டத்திற்காக விலை மனுக் கோரல் முறைமையை பின்பற்றாதது ஏன்? டொலர் அதிகரிக்கும் போது பழைய மதிப்பீட்டு விலைக்கு இப்போது செய்ய முடியாது என்பது உண்மையே.
ஆனால் அதனை காட்டி திருட்டை செய்ய முயற்சிக்கின்றனர். இங்கேயே உண்மையான பயங்கரவாதம் உள்ளது. திருட்டுக்கு பாதை அமைப்பதே அது. இதில் இருக்கும் உண்மைகளை மூடி மறைக்க முடியாது என்றார்.
பா.நிரோஸ்
Post a Comment