எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் - பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை மாணவி உருக்கமான கோரிக்கை
பிரான்ஸில் கணிதபாடத்தில் தேசிய மட்டத்திலான பரீட்சையில் முதலாம் இடத்தை பெற்று சித்தியடைந்து மேகா சந்திரகுமார் என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி பெருமை சேர்த்துள்ளார்.
அம் மாணவியை கௌரவிக்கும் நோக்கில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) மாணவியை அழைத்திருந்தார்.
இதன்போது மாணவி மேகா சந்திரகுமார் “உங்களது உதவி எனக்குக் கிடைத்தால் எனது குடும்பமும் நானும் சந்தோஷமடைவோம் ஆனால் தற்போது எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏதாவது செய்யுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மேகா சந்திரகுமார் என்ற மாணவிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Post a Comment