உணவுப் பொருட்கள் பதுக்கலை, தடுக்க புதிய சட்டம் வருகிறது
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ , மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளின் பல்வேறு தரப்பினரை அழைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று -15- ஆராய்ந்துள்ளார்.
உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுத்து, ஆலை உரிமையாளர்கள் பெருந்தொகை நெல்லை பதுக்கி வைப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்குவதாக இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைமுறையில் இருந்த அத்தனை சட்ட செயல்படுத்துவது சார்ந்த அத்தனை சட்டங்களையும் ஒழித்துவி்ட்டு மெதமுலானையின் குடும்பத்துக்கு நா்ட்டுச் சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடுவதற்கு சட்டத்தை ஒழித்துக் கட்டிவிட்டு இப்போது மீண்டும் சட்டத்தைக் கொண்டுவருகின்றார்களாம். இந்த அரசும் அதன் அடிவருடிகளும் நாசமாகப் போகட்டும் எனத் திட்டுவதைத் தவிர பொதுமக்களாகிய எம்மிடம் எதுவும் மிச்சமாக இல்லை.
ReplyDelete