Header Ads



ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டை அழித்தது, இப்போது மீள் சுழற்சி செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது


 டொலர்களை சம்பாதிக்க பல்வேறு சிறந்த வழிகள் உள்ளன எனவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பது அவற்றில் ஒரு வழிமுறை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று அரசாங்க நிதி பின்புலம் வெற்றாக உள்ளதாகவும்,இன்று வக்குரோத்தான அரசும், வக்குரோத்தான நாடுமே உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ராஜபக்ஸ அரசாங்கம் இந்நாட்டை அழித்துவிட்டு இப்போது அதற்கு பகரமாக மீள் சுழற்சி செய்யப்பட்ட ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், இவர்கள் முன்னைய அரசாங்கத்தை விடவும் தோல்வியடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த  நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை,தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற,ஸ்மார்ட்  கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் 'பிரபஞ்சம்' முன்னோடித் திட்டத்தின் 21 ஆவது கட்டமாக எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (846,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மேல் மாகாணம், அவிசாவளை ஸ்ரீ ரதனசார மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (03) வழங்கி வைத்தார்.

நாட்டில் இன்று உணவுப் பிரச்சினை உருவாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களிடமும் உள்ளூர் பயிர்ச்செய்கை உற்ப்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.