Header Ads



திரிபோஷாவுக்கு தட்டுப்பாடு, கர்ப்பிணிகள் பாதிப்பு, வெளிநாடுகளிடம் உதவி கோரல்


கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா கையிருப்பில் இல்லை என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் திரிபோஷாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சோள விளைச்சல் இல்லாமையே திரிபோஷா உற்பத்தி தடைப்படுவதற்கு முக்கிய காரணமாகும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.