பேஸ்புக்கை கட்டுப்படுத்த கடும் சட்டங்களை உருவாக்க வேண்டும்
முகநூல் சமூக ஊடக வலையமைப்பு ஊடக நடக்கும் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முகநூல் வழியாக பல்வேறு தகவல்களை அனுப்பி, பல இடங்களுக்கு வருமாறு கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை அழிக்க சம்பந்தப்பட்ட திட்டமிட்ட சக்தி குறித்து நாம் சிந்திக்க வேண்டும் பிரதமர் அவர்களே.
நாம் அதனை தேடி அறிய வேண்டும். முகநூல் மூலமாக நடக்கும் மோசமான அழிவா ன செயல்கள் பற்றி நான், நீங்கள், அமைச்சரவையில் இருப்பவர்கள் அறிவார்கள்.
எமது முன்னாள் பிரதமருக்கும் தெரியும். இது குறித்து நான் திட்டவட்டமான நிலைப்பாட்டில் இருந்து பேசியவன்.
முகநூல் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளை நிறுத்துவதற்காக வலுவான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும். இன்னும் அதற்கு தாமதமில்லை எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment