தம்மிக பெரேராவிற்கு எதிராக, அவரது வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம்
கொழும்பில் இன்றைய தினம் -12- பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தம்மிக்கவின் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment