சாணாக்கியன் மீது, ரணிலுக்கு என்ன கோபம்..? வாபஸ் பெறவிட்டால் நடவடிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலமான பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள குறித்த அனுதாப உரையின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
20வது திருத்தச் சட்டம் போன்று நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் விடயங்களுக்கு வாக்களித்ததால் மக்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக மே 20ஆம் திகதி ஹன்சார்ட் அறிக்கையில் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் எம்.பி. கூறினார்.
அதாவது எதிரான கருத்து காரணமாக வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. 20, 21 இந்த பட்ஜெட்டுகள் அனைத்திலும் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் இருந்தன.
20, 21 இரு வரவு செலவுத் திட்டங்களுக்கும் கை தூக்கியதால்தான் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
மக்கள் செய்த துரோகத்தால்தான் அவர்களுக்கு இது நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இப்படி பேச முடியும். லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது அவர் விடுதலைப் புலிகளால் விமர்சிக்கப்பட்டார்.
இப்போது இது பாராளுமன்றினுள்ளே செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? அப்படியென்றால் இந்த வீடுகளுக்கு தீ வைக்கப்படுவதை அவர் அங்கீகரிக்கிறாரா? இந்த மரணங்களையும் நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
வெல்கம மீதான தாக்குதலை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்த சபையில் நான் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.
இந்த பாராளுமன்றத்தை சுற்றி வளைத்த போது வந்து எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்கள்.
எதிர்வரும் பாராளுமன்ற வார இறுதியில் நீங்கள் வருத்தம் தெரிவித்து இதனை வாபஸ் பெறவில்லையென்றால், அது தொடர்பில் ஆராய்ந்து உரிய குழுவிடம் சமர்ப்பித்து அறிக்கை தருமாறு சபாநாயகரிடம் நான் கோருவேன்.
Post a Comment