“ கப்புட்டு கா கா, பசில், பசில், பசில்” என்று கூறுவதுதான் இப்போது எனது ரிங்க் டோன்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது பாடப்பட்ட “ கப்புட்டு கா கா, பசில், பசில், பசில்” என்ற பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவிக்கும் வகையில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பசில் ராஜபக்ச இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, பசில் பசில் பசில் என்று கூறுவது தான் இப்போது எனது ரிங்க் டோன் என்றும் அதுதான் எனது பெயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் படிக்கும் காலத்தில் இருந்து இதுவரை எனக்கு யாருடனும் விரோதங்களோ பழிவாங்கும் குணங்களோ கொண்டதில்லை என பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்தார். ibc
Post a Comment