வாழ வழியில்லையாம்..! பெண்ணை காப்பாற்றிய துணிகர மனிதர்கள்
மினிபே, ஹசலக நகருக்கு அருகில் உள்ள ஆற்றுக்கு அருகில் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இளைஞன் பெண் ஒருவரை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்வதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
அப்போது, அருகில் உள்ள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமல்க இசுரங்க என்ற இளைஞர் இந்த சம்பவத்தை அவதானித்த நிலையில் பெண்ணை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார்.
இந்த நிலையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியான வின்ஸன் ராஜபக்ஷ என்பவரும் ஆற்றில் குதித்துள்ளார். இருவரும் இணைந்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சமல்க இசுரங்க, ஹசலக்க, கீனபலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ஆற்றுக்கு அருகில் மக்கள் கூட்டம் அலைமோதுவதைக் கண்டு, இது குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போதே பெண் ஒருவர் நீரில் மூழ்குவதனை கண்டு அவர் ஆற்றில் குதித்துள்ளார்.
மஹியங்கனையில் தொலைபேசி அட்டை விற்பனையாளராக கடமையாற்றும் 58 வயதான கல்யாணி என்ற பெண்ணே நீரில் குதித்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸ் அதிகாரியும் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக குதித்துள்ளார்.
இருவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த மக்கள் இருவரையும் பாராட்டியுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் வாழ வழியில்லாமல் தற்கொலைக்கு முயற்சித்ததாக அந்த பெண் குறித்த குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment