Header Ads



ஜனாதிபதி நடத்திய கூட்டத்தில், அமைச்சுக்குப் பொறுப்பான ஹரீனை காணவில்லை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (10) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பங்கேற்கவில்லை.

அமைச்சர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், அவர் வராதமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும், “கோட்டா கோ காமா” அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

எனினும், அனைத்து சுற்றுலா அமைச்சக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொதுவாகவே அந்தந்த அமைச்சுக்கள் சம்பந்தப்பட்ட கூட்டங்களுக்கு அதனுடன் தொடர்புடைய அமைச்சர்கள் பங்கேற்பது வழமையானது. ஒருவகையில் கட்டாயமும் கூட. எனினும் குறித்த இந்த கூட்டத்தில் ஹரீன் பங்கேற்கவில்லை. அமைச்சர் இன்றியே அமைச்சு அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் ஜனாதிபதி.

 NW

No comments

Powered by Blogger.