மக்களை அச்சத்தில் மூழ்கடித்து வரும் ரணில்
இந்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு மிகவும் கடினமான காலமாகும். எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான வரிசைகளில் இது தெளிவாக தெரிகின்றது.
தற்போது எரிவாயுவுடன் கப்பல் ஒன்று வந்துள்ளது. கப்பலில் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளது. இந்த எரிவாயு விசேடமாக மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் தகனசாலைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்
அடுத்த எரிவாயு கப்பல் ஊடாக 4 மாதங்களுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்ளலாம். அதற்காக 14 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு கப்பலையாவது இலங்கைக்கு கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்.
நாங்கள் தொடர்ந்து எரிபொருள் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். எனினும் தொடர்ந்து தற்போதுள்ள கோரிக்கையில் 50 சதவீதமே தொடர்ச்சியாக வழங்க முடியும்.
மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பல அத்தியாவசிய சேவைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். எங்களிடம் 7 நாட்கள் மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளது. ஆனால் இம்மாதம் 16ஆம் திகதி 40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டிற்கு வரவுள்ளது.
ஏற்கனவே அறிவித்ததற்கமைய எதிர்வரும் மூன்று வாரங்கள் இலங்கையில் கடினமான காலம் ஆரம்பமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், இந்தியாவுடனான புதிய கடன்வரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் 4 மாதங்களுக்கு எரிபொருள் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதிலிருந்து மக்களை அச்சம் கொள்ளும் வகையில், நாட்டின் நிலைமையை வெளிப்படுத்துவதாக பலரும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment