ஜப்பான் நாடாளுமன்றம் முன் இலங்கையர் சத்தியாக்கிரகப் போராட்டம்
ஜப்பானில் பணியாற்றும் இலங்கை வாலிபர் ஒருவர் தனி ஆளாக ஜப்பான் நாடாளுமன்றம் முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிசாந்த ஜயதிலக்க எனும் வாலிபர் ஒருவரே இவ்வாறு அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக சத்தியாக்கிரகமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து அவர் தனது சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துள்ளார்.
தற்போதைக்கு ஜப்பானின் ஒசாகா நகரில் பணியாற்றும் அவர் சுமார் 6000 கிலோமீற்றர் பயணம் செய்து டோக்கியோவுக்கு வருகை தந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஜப்பானிய மக்களின் கவனத்தை திருப்பும் நடவடிக்கையாகவே தான் இதனை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment