Header Ads



எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், முன்னேறிய போது நாம் என்ன செய்தோம்..?

IMF டம் இருந்து கடனைப் பெற இலங்கை இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பும் தேவைப்படும் எனவும் இது எளிதான விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுக்குப் பின் வந்த பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகள் உலகத்துடன் இணைந்து ஏற்றுமதி செய்து முன்னேறிய போது நாம் என்ன செய்தோம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் நம் நாட்டைச் சுற்றிச் சுவர்களைக் கட்டினோம், வரிகளை நிறைய உயர்த்தினோம், உலகில் சேர வேண்டிய சில வாய்ப்புகளை இழந்து உலகை விட்டு வெளியேறினோம்.


அனைத்து நாடுகளுடனும் மோதிக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் பணம் பெற முடியாது.

கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாளை அல்லது நாளை மறுதினம் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கை வருகின்றார்களாம். ஆனால் ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் ஒன்றரை மாதங்கள் ஆகும்.

கடன் பெறுவதென்றால் சர்வதேச நாணய சபை அனுமதி வழங்க வேண்டும். அதைச் செய்ய நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. 

நிதி நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். மானியங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடன் மறுசீரமைப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அது எளிதானது அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார். TAMILWIN

No comments

Powered by Blogger.