Header Ads



வேலைப்பளு, உணவின்மை, மன அழுத்தத்தினால் மோடி, கோத்தபயவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறிவிட்டேன்


COPE குழுவில் தாம்  தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினான்டோ அறிவித்தார்.

மின்சார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக உணவு கூட உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வௌியிடப்பட்டதாக அவர் கூறினார்.

கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.