Header Ads



கோட்டாபயவை முதலில் ரணில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும், ஆதரவு வழங்க SJB தயார் - சஜித்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது. எனவே, கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகினால்தான் மக்களின் மனதை வென்று பிரதமர் ரணிலால் பணியாற்ற முடியும் என்றும் அவர் சஜித் சுட்டிக்காட்டினார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்கின்றது. ஆனால், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய புள்ளியாக விளங்கும் கோட்டாபய வெட்கம் இல்லாமல் இன்னமும் ஜனாதிபதிக்கான கதிரையில் அமர்ந்திருக்கின்றார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாகத் தான் செல்லமாட்டார் என்று அவர் சவால் விடுகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டின் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும். ஏனெனில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது.

ராஜபக்ச குடும்பத்தினரைக் காப்பாற்றவே பிரதமர் பதவியை ரணில் பொறுப்பேற்றார் என்று பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு ரணில் செயற்பட வேண்டும். கோட்டாபயவுக்கு எதிரான மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் ரணில் ஈடுபடக்கூடாது என குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.