Header Ads



உணவு பரிமாறலுடன் முடிவடைந்த ஆளும் கட்சியின் கூட்டம் - பேசப்பட்டது என்ன..?


ஜனாதிபதி மாளிகையில்  ஆளும் கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறுகிறது

ரணில் மற்றும் ஒரு அறையில், இங்கிலாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தார்.

ஆரம்பத்தில் ரணில் இல்லாத நிலையில் கூட்டம் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மாளிகையின் உணவருந்தும் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு முதலில் பசில் ராஜபக்ச வருகிறார்.

மகிந்த - பசிலை அடுத்து மகிந்த வருகிறார். அவர் ஆர்வத்துடன் எனினும் சற்று கலக்கமடைந்தவராகவே தோன்றுகிறார்.

அமைச்சர்களான டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வலது பக்கத்தில் அமர்ந்திருந்தார்.

தலைமை மேசையில் தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வேறு ஒரு கதவு வழியாக அங்கே பிரவேசிக்கிறார்.

சுருக்கமான முறையில் 21வது வரைவு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதே கூட்டத்தின் நோக்கமாகும் என்று கூறுகிறார்.

விஜயதாச ராஜபக்ச அந்த விளக்கத்தை வழங்குகிறார்.

முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, தானும் இன்னும் சிலரும் விஜயதாச ராஜபக்சவுடன் பிரச்சினைகளை மேலும் விவாதிக்க விரும்புவதாகக் கூறுகிறார்கள்.எனினும் அதற்கு அன்றைய தினம் இடமளிக்கப்படவில்லை.

பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதாக கூறிய முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நீர்கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்சா கூறுகிறார். தாம் 21 க்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார்.

முன்னாள் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர 21 க்கு எதிராக குரல் கொடுக்க பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என்று அவர் தெரிவிக்கிறார்.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் தான் தண்டிக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவிக்கிறார்.

தாம் சுவிஸ் குடியுரிமையை கைவிட வேண்டியிருந்தது. எனவே இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், பிற நாட்டுக் குடியுரிமையைத் துறந்து, இலங்கை குடியுரிமையை மாத்திரம் கொண்டிருக்கவேண்டும் என்று கோருவதாக அவர் குறிப்பிடுகிறார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பக்கம் திரும்பி, "ஐயா,(சேர்) நீங்களும் அதையே செய்தீர்கள்" என்று குறிப்பிடுகிறார். பின்னர் தமது ஆசனத்தில் அமரும்போது, “கோமத மகே கிரேனேட் பிரஹாரய” எப்படி எனது கையெறிக் குண்டு தாக்குதல்? என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் வினவுகிறார்.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என சரித ஹேரத் குறிப்பிடுகிறார்.

உணவு நிலைமை தொடர்பான விடயங்களை அமைச்சர் மஹிந்த அமரவீர மிகைப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்துகிறார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரவு உணவு பரிமாறலுடன் இரண்டு மணி நேர கூட்டம் முடிகிறது. TW

No comments

Powered by Blogger.