Header Ads



இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நடந்தது என்ன..?


சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டமொன்று இன்று -30-  நடைபெற்றது.

நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்றைய தினம் மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது

இக் கலந்துரையாடலின் போது, ஜூலை மாதம் முதல் வார நாடாளுமன்ற அமர்வுகளை 4, 5, 6 ஆகிய திகதிகளில் மட்டும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை வாய்மூல கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பிரேரணையின் பிரகாரம் 5 ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றிருந்தன. TW


No comments

Powered by Blogger.