கத்தார் அமீருடன், ஜனாதிபதி பேச்சு - உரையாடிய விடயங்கள் என்ன..?
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி புதன்கிழமை மாலை (ஜூன் 08) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அழைப்பின் போது இலங்கைக்கும், கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இரு தலைவர்களும் மீளாய்வு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் விவாதத்தின் கவனம் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகள் மற்றும் பொதுவான ஆர்வமுள்ள பல பிரச்சினைகள் மீதும் விழுந்தது.
இதற்கிடையில், கத்தார் நாட்டுக்கான தூதர் ஜாசிம் பின் ஜாபர். J.B. Al-Sorour இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸை வெளிவிவகார அமைச்சில் ஜூன் 06 அன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரையில் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தூதுவர் அல்சொரூரிடம் விளக்கினார்.
கட்டார் தூதுவர், இலங்கை-கத்தார் இருதரப்பு உறவுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் உறுதியளித்துள்ளார்
The talk between the two ended like this...
ReplyDeleteAmir : Bur your guy Gnanasara hates all Muslims.
GR: But Machan, I love One Muslim.
Amir: Who is THAT???!!!
GR: Ali Sabry
The line went dead. The Amir has a new phone now!!!