இலங்கைக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய வீரர்கள் கோரிக்கை
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள தமது ரசிகர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 47.2 மில்லியன் டொலர்களை திரட்டுவது இதன் இலக்காகும்.
இந்த நிதி இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ பதிவொன்றை வெளியிட்டு அவுஸ்திரேலியா வீரர்கள் இருவரும் குறித்த நிதி திரட்டும் பிரச்சாரத்தில் இணைந்தனர்.
Post a Comment