மன்னிப்பு கோரியுள்ள ஹரீன்
ரஸ்ய விமானப் பயணிகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஸ்யாவிற்கு சொந்தமான எயாலொப்ட் விமான சேவை விமானம் தடுத்து வைக்கப்பட்டதனால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த சம்பவம் ஓர் துரதிஸ்டவசமான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு கண்டு கொழும்பிற்கும் - ரஸ்யாவிற்கும் இடையில் விரைவில் விமான பயணங்களை ஆரம்பிக்க விரும்புவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Post a Comment