சமைக்க வழியின்றி பசியால் இறக்க நேரிடும்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடிகள் காரணமாக கொழும்பு நகர மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்றும் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் சமைக்க வழியின்றி பசியால் இறக்க நேரிடும் எனவும் எதிர்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடைகள் முதற்கொண்டு அனைத்தும் எரிவாயு நெருக்கடி காரணமாக முடங்கி இருப்பதால் மேலும் நெருக்கடிக்கு முகம் கொடுப்பதாகவும் மக்கள் இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment