எமது மகன் தண்ணீரில் குதித்தாரா? அல்லது யாராவது ஒருவர் அவரை ஆற்றில் தள்ளி விட்டாரா?
களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் குடும்பத்தார் மகனை தாக்கியிருந்ததாகவும் மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே தமது மகன் தண்ணீரில் குதித்தாரா? அல்லது யாராவது ஒருவர் அவரை ஆற்றில் தள்ளி விட்டாரா? என்பது குறித்து சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment