Header Ads



இலங்கை ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறோம் - ஜெனீவாவில் கோரிக்கை


அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த அரசியல்வாதிகள் போராட்டக்காரர்ளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது அமர்வில்,  இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய கனடா,ஜேர்மனி, மலாவி மொன்டினீக்ரோ, வடமசடோனியா பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சார்பில்அறிக்கை ஒன்றை வாசித்த, பிரித்தானியாவின் பிரதிநிதி ரிட்டா ஃப்ரென்ச் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த சில மாதங்களாக இலங்கை சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை நாம்  ஏற்றுக்கொள்கின்றோம், இதனால் இலங்கை மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதன்போது போராட்டக்காரர்கள் அண்மைக்காலமாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும்  கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். 

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துதல்,  சுதந்திரமான நிறுவனங்களைப் பேணுதல் ஆகியவற்றின் தேவைப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். நீண்டகாலமாக காணப்படுகின்ற  தண்டனையின் பிடியில் இருந்து விடுபடுதல் மற்றும் ஊழலுக்கு தீர்வு காணுமாறும், நல்லாட்சி மற்றும் ஆரோக்கியமான பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தை முன்னிலைப்படுத்திக் காட்டுமாறும் இலங்கை ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறோம்.

சிவில் சமூகத்தின் கண்காணிக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தலுக்கு அதாவது குறித்து  எங்கள் கரிசனைகள் தொடர்கின்றன, மேலும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான சூழலை  பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இலங்கை மனித உரிமை ஆணையாளருக்கும் அவரது அலுவலகத்திற்கும் ஆதரவை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் அத்துடன்  ஜெனீவாவில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.