நாளாந்தம் 400 மில்லியன் ரூபா பண மோசடி
இலங்கை கலால் திணைக்கள அதிகாரிகள் நாளாந்தம் சுமார் 400 மில்லியன் ரூபா வரையான பணத்தை மோசடி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் கலால் திணைக்கள பரிசோதகர்களுக்கு எதிராக மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நேற்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின் தலைவர் கே.டி.பி. பெர்னாண்டோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கலால் திணைக்கள பரிசோதகர்களின் ஏமாற்று மோசடி நடவடிக்கைகள் காரணமாக நாளாந்தம் 400 மில்லியன் ரூபா அளவிலான இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்படுகின்றது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment